2025 மே 14, புதன்கிழமை

பேனை வடிவிலான பிஸ்டல் மீட்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

பேனை வடிவிலான பிஸ்டல் ரக துப்பாக்கியை சிலாபம் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே பேனை வடிவிலான பிஸ்டல் ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள், புத்தளம்,சிலாபம், வென்னப்புவ, மாரவில மற்றும் தங்கொட்டுவ போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.


                 
























You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .