2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கப்பம் பெற்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரத்திலிருந்து  கொழும்பு நோக்கிப் பயணிக்கும் தனியார் பஸ் வண்டி நடத்துநர் ஒருவரிடம் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கெக்கிராவ பஸ் நிலையத்தில் குறித்த பஸ் வண்டி நடத்துநரிடமிருந்து 300 ரூபாவை கப்பமாகப் பெற்றபோது சந்தேக நபர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ, வெருப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 45) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பயணிகள் போன்று சென்ற குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரே சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .