2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

மாணவனை தாக்கிய பஸ் நடத்துனர் கைது

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பாடசாலை மாணவனை தாக்கியதாக கூறப்படும் பாடசாலை சேவை தனியார் பஸ்ஸின் நடத்துனரை கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆராச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரெ இவ்வாறு நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டவராவார்.

சிலாபம் பிரதேச பாடசாலைகளில் பல்வி பயிலும் மாணவர்களை ஏற்றும் 'சிசுசெரிய' எனும் தனியார் பாடசாலை சேவை பஸ்ஸில் கடந்த வியாழக்கிழமை மாலை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிலாபம் பிரதேச பாடசாலையில் கல்வி பயிலும் 12 வயதுடைய மாணவர் ஒருவரையே குறித்த சந்தேக நபர் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த மாணவன் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சிலாபம் பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .