2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

ஹெரோயினுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 30 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் பொலிஸாரினால் 75 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்கிழமை இரவு புத்தளம், அநுராதபுர வீதியில் பொலிஸார் நடத்திய திடீர் தேடுதலின் போது கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியினை சோதையிட்ட போதே ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோயின் சுமார் 15 இலட்சம் ரூபா மதிப்புடையது என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டதுடன் முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளினை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .