2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஆசிரியர் பலி

Super User   / 2013 ஒக்டோபர் 31 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கெப் வண்டியொன்றும் மோட்டார் வண்டியொன்றும் நேற்று புதன்கிழமை நேருக்கு நேர்  மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலியஇ கோன்வௌ பகுதியைச் சேர்ந்த ஆங்கிலம் மற்றும் கணனி பாட 46 வயதுடைய டியூசன் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு செல்லும் வழியில் கங்ஹிந்திகம பகுதியில் வைத்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக 22 வயதுடைய கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .