2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

புத்தளம் பண்டாரநாயக்கபுர ஆரம்ப பாடசாலை திறப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 19 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம், பண்டாரநாயக்கபுர ஆரம்ப பாடசாலை நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் பியசிறி பிரியந்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன, பிரதியமைச்சர் விக்டர் அண்டனி பெரேரா, மாகாண சபை உறுப்பினர்கள், வணாத்தவில்லு பிரதேச சபைத் தலைவர் இந்திக சேனாதீர, புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்ணான்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது 5ஆம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .