2025 மே 14, புதன்கிழமை

வல்லுறவுக் குற்றச்சாட்டில் இளைஞரை கைதுசெய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தனது உறவு முறையான  சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய இளைஞரொருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்குச்  செல்லும் சிறுமியொருவரை இவ்விளைஞரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இச்சிறுமியின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்துவரும் நிலையில், இச்சிறுமி தனது சகோதரனோடு பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இச்சிறுமியின் வீட்டுக்கு வந்த உறவு முறையான இவ்விளைஞர்  சிறுமியைப்  வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்படுவதை கண்டுகொண்ட  சிறுமியின் பாட்டி, சிறுமியை  சிலாபம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்தியர்களிடம் காண்பித்துள்ளார். சிறுமியைப் பரிசோதித்த வைத்தியர்கள் இச்சிறுமி 02 மாதக் கர்ப்பிணியென்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இது தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன்போது, தன்னை குறித்த தனது உறவு முறையான இளைஞர்  வல்லுறவுக்குட்படுத்தியதாக  பொலிஸாரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .