2025 மே 14, புதன்கிழமை

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் நகைகளை திருடியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தங்கநகைகளை திருடிச்சென்றதாகக் கூறப்படும் நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிடத்திலிருந்து சுமார் 57,400  ரூபா பெறுமதியான தங்கநகைகள்  திருடிச் செல்லப்பட்டன.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்; தங்கியிருக்கும் தங்குமிடத்திலுள்ள தனக்குரிய அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகளே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டதாக  குறித்த பெண் பொலிஸ் உத்தியோத்தகர்  முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X