2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஆனமடு, திவுல்வெவ பிரதேசத்தில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆனமடு, திவுல்வௌ பிரதேசத்திலுள்ள குளமொன்றில் பரலொன்றினுள் மேற்படி கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.  சுமார் 600,000 ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேற்படி கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரும் நேற்று புதன்கிழமை காலை  கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் இதற்கு முன்னரும் கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் கூறினர்.

ஆனமடு, பள்ளம, நவகத்தேகம போன்ற பிரதேசங்களில் கஞ்சா விற்பனையில் இச்சந்தேக நபர் ஈடுபட்டுவந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை தொடர்ந்து  பொலிஸார்  சுற்றிவளைப்பில் ஈடுபட்டு கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X