2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புத்தளம் மீனவர்கள் பணிபகிஷ்கரிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 16 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மீனவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த எரி பொருள் மானியம் இடை நிறுத்தபட்டுள்ளதை கண்டித்து இயந்திரப் படகு மூலம் கடற்றொழிலில் ஈடுபடும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று திஙகட்கிழமை கடற்றொழிலுக்கு செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலுக்கு செல்லாத மீனவர்கள், தமது வலைகளை பழுது பார்க்கும் நடிவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, நீர் கொழும்பு பிரதேசங்களில் உள்ள  மீனவர்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடபோவதாக  மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X