2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்திமதி கூறிய ஆசிரியையை வீட்டுக்கு அனுப்பிய அதிபரிடம் விசாரணை

Kanagaraj   / 2014 ஜூலை 08 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருணாகல் நகர சபை தலைவரின் பிள்ளைக்கு புத்திமதி கூறிய ஆசிரியை ஒருவரை, மன்னிப்பு கேட்பதற்காக நகரசபை தலைவரின் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குருணாகல் மலியதேவ மகா வித்தியாலயத்தின் அதிபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கல்விச் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய பாடசாலை பிரிவின் விசாரணை குழுவினர், இன்று செவ்வாய்கிழமை (08) குருணாகல் பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசியல்வாதி ஒருவரின் வீட்டிற்கு ஆசிரியயை அனுப்பிய சம்பம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கல்வி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X