2025 மே 09, வெள்ளிக்கிழமை

திண்மக் கழிவுகளை வீடுகளிலேயே பிரித்து எடுக்கும் புதிய வேலைத்திட்டம்

A.P.Mathan   / 2014 ஜூலை 22 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.யூ.எம்.சனூன்
 
புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் ஏற்பாட்டில், திண்மக் கழிவுகளை வீடுகளிலேயே பிரித்து எடுக்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
சேதனக்கழிவு, கடதாசி, காட்போட் கழிவு, பிளாஸ்டிக் கழிவு என வேறுவேறாக வீடுகளிலிருந்தே பிரித்தெடுத்து உர உற்பத்திக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக புத்தளம் ஆறாம் வட்டாரத்திற்கு உட்பட்ட சகல வீடுகள் மற்றும் கடைகளுக்கும் கழிவுகளை பிரித்து எடுப்பதற்கான உறைகள் கடந்த சனிக்கிழமை முதல் (19) வழங்கப்பட்டன.
 
இதற்கென ஒரு வீட்டுக்கு தலா மூன்று உறைகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று உறைகளுக்கும் நகர சபையினால் 45 ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X