2025 மே 09, வெள்ளிக்கிழமை

மீனவர்களுக்கு மீன் பிடி வள்ளங்கள் வழங்கிவைப்பு

Super User   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் நகர மீனவர்களுக்கு முதல் கட்டமாக  71 மீன் பிடி வள்ளங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (14) மாலை புத்தளம் கடற்கரை மிஹ்ராஜ் மஸ்ஜிதுக்கு அருகில் இடம்பெற்றது.

புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸின் முயற்சியின் பேரில் மின்சக்தி எரி சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பணிப்புரைக்கமைய இலங்கை மின்சார சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த மீன் பிடி வள்ளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 300 வள்ளங்கள் மீனவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதற்கென 30 மில்லியன் ரூபாய் நிதி இலங்கை மின்சார சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு வள்ளங்களும் 80 ஆயிரம் ரூபாய் முதல் 01 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தவையாகும்.

முதல் கட்ட மீன் பிடி வள்ளங்கள் வழங்கும் நிகழ்வில் புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் பியதாஸ, புத்தளம் கூட்டுறவு சங்க உப தலைவர் டொனில் போபஸ், நகர சபை செயலாளர் நிசாந்த குமார, நகர சபை உறுப்பினர்களான டி.முஜாஹிதுல்லா, மஞ்சுள தரங்க உட்பட  மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

புத்தளம் நகரில் பதிவு செய்யப்பட்ட மீனவ சங்கங்களான அல் அமீன், வலம்புரி, ஸ்டார், பேர்ள்ஸ், நியூ அம்பர், நியூ வளர்பிறை, உதவும் கரங்கள், எகமுது, சேகுவன்தீவு ஆகியவற்றில் அங்கத்துவம் வகிக்கும் மீனவர்களுக்கு வள்ளங்கள் வழங்கப்படவுள்ளன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X