2025 மே 09, வெள்ளிக்கிழமை

நள்ளிரவில் மின்துண்டிப்பு: மக்கள் அசௌகரியம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக நள்ளிரவுக்கு பின்னர் மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கி விடுவதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்குள்ளாகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை (18) முதல்  நள்ளிரவுக்கும் பின் ஏற்படும் மின்தடை மறுநாள் காலை 8 மணிக்கு பின்னNர் வழமைக்கு திரும்புகின்றது.

இறுதியாக புதன்கிழமை (20) நள்ளிரவுக்கு பின்னர் தடைப்பட்ட மின்சாரம் இன்று வியாழக்கிழமை (21) மாலையே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நீரும் வழங்கப்படவில்லை. எனவே மின்சாரமின்றியும், நீருமின்றி புத்தளம் நகர மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை இரவில் நிரந்தரமாக ஏற்படும் மின்தடைக்கு புறம்பாக காலையிலும் மாலையிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதும் வழமையாகிவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்திலிருந்து அனல் மின்சாரம் மற்றும் காற்றாடி மூலமான மின் உற்பத்தி நடைபெற்று வெளி மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்ற இந்நிலையில் புத்தளத்தில் இவ்வாறான மின்துண்டிப்பு ஏற்படுவது கவலைக்குரிய விடயம் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X