2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வௌ பகுதியில் மான் இறைச்சி வைத்திருந்த ஒருவரை வெள்ளிக்கிழமை (22) கைது செய்யததாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வௌ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேக நபரின் வீட்டினை பரிசோதித்த போது, மான் இறைச்சி மற்றும் மிருகங்களை கொல்வதற்கு பயன்படுத்தப்படும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் ஏற்கெனவே 03 தடவை மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் தெரியவந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X