2025 மே 09, வெள்ளிக்கிழமை

சூதாட்ட நிலையத்தில் பொலிஸார் மீது தாக்குதல்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்

சூதாட்டம் நிலையமொன்றை  முற்றுகையிட்ட பொலிஸாருக்கும் சூதாட்டக்காரர்களுக்குமிடையில் இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்த, உப-பொலிஸ் பரிசோதகர் உட்பட மற்றொருவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் முன்னேஸ்வரம் பூக்குளம் எனும் பிரதேசத்தில் வைத்தே இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அங்கிருந்து ஏழாயிரம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் முன்னேஸ்வரம் பிரதேசத்தில் சூதாட்ட நிலையமொன்று இயங்குவதாக  சிலாபம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்தை உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

அவ்விடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் அதிக மது போதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இதன் போது சிவில் உடையில் அவ்விடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் மீது அங்கிருந்தோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.  இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகரும், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ விஜேசேன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X