2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி உதவி பெறுவோருக்கு உடனடி கடன்

Gavitha   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


திவிநெகும ஆபிவிருத்தி திட்டத்தின் கீழ், சமுர்த்தி உதவி பெறும் சுமார் 200 குடும்பங்களுக்கு புத்தளம்  உடனடி கடன் வழங்கும் வைபவம் புத்தளம் நகர மண்டபத்தில்  திங்கட்கிழமை (01) மாலை நடைபெற்றது.

இதன்போது, 5000 ரூபாய் முதல் 50000  ரூபாய் வரை கடன்தொகை வழங்கி வைக்கப்பட்டது.  நகர சபை தலைவரும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸினால் கடன் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, புத்தளம் பிரதேச சபை தலைவர் நிமல் பமுனு ஆராச்சி, பிரதேச சபை உறுப்பினர் சோமவீர, முன்னாள்  பிரதேச சபை உறுப்பினர் டொனில் போபஸ், புத்தளம் பிரதேச உதவி செயலாளர், சிவில் விமான சேவை அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X