2025 மே 09, வெள்ளிக்கிழமை

மூலிகை கண்காட்சி

Gavitha   / 2014 நவம்பர் 12 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


மூலிகை தோட்டம், மூலிகை மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்ட புராதன பொருட்கள், ஏனைய தொல்பொருட்கள் மற்றும் 14 பரம்பரைக்கு அப்பாற்பட்ட மூலிகை மருந்து தயாரிக்கும் சுவடுகள் என்பன உள்ளடங்கிய கண்காட்சி நிலையம் ஒன்று புதன்கிழமை (12) சிலாபம் சிதார ஆயுர்வேத வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கண்காட்சியில் உலகளவில் அருகி வரும் பல்வேறு மூலிகை செடிகளும் மரங்களும் காணப்படுகின்றன.

சிதார ஆயுர்வேத வைத்தியசாலையின் உரிமையாளர் வித்தியாசுரி, தேசமான்ய பி.எம்.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி  ஆரம்ப நிகழ்வில், மதுரையிலிருந்து வருகை தந்திருந்த சித்தர் ரமேஸ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலரும் இக்கண்காட்சியியை பார்வையிட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X