2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 13 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

இந்நாட்டில் உற்பத்திசெய்யப்பட்ட 02 கட்டுத்துவக்குகள் மற்றும்  கல்கடாஸ் வகை துப்பாக்கியொன்றை  வைத்திருந்ததாகக் கூறப்படும்  ஒருவரை புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்குழி பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இச்சந்தேக நபரை, வீதிக் கடமையிலிருந்த புத்தளம் பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினர் இடைமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது, இவர் துப்பாக்கி வைத்திருந்தமை தெரியவந்தது.

இந்நிலையில், சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன், துப்பாக்கிகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X