2025 மே 08, வியாழக்கிழமை

குளத்தில் மூழ்கி மூவர் பலி

Thipaan   / 2015 ஜனவரி 08 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெருக்குவட்டான பிரதேசத்தில் அமைந்துள்ள குளம் ஒன்றில் மீன்பிடிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முதியவர்(வயது 50) ஒருவரும் அவரது 13 மற்றும் 11 வயதுடைய இரு பேரன்களுமே உயிரிழந்துள்ளனர்.

இதன் போது குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூவரும் சகதியில் சிக்கி நீரில் மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு முந்தல் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X