2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஜனாதிபதி தேர்தலை போலவே நாடாளுமன்றத் தேர்தலிலும் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது : முஹுஸி

Sudharshini   / 2015 ஜனவரி 14 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாவட்டத்தில் அரசியல் விழிப்புணர்வு மன்றமானது, புத்தளம் மாவட்டத்தில் கடந்த 25 வருடங்களாக மக்கள் இழந்திருந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீட்டெடுக்கும் உன்னத நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தனது பணியை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பு ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக சந்தித்தது போல, தற்போது அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹுஸி தெரிவித்தார்.

எதிர்கால அரசியல் காய் நகர்த்தல் தொடர்பாக அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்களில் தனது அதிக கவனத்தையும் செயற்பாடுகளையும் காத்திரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை,வண்ணாத்திவில்லு பிரதேச சபை, ஆராட்சிக்கட்டு பிரதேச சபை, சிலாபம் நகர சபை , சிலாபம் பிரதேச சபை, நாத்தாண்டிப் பிரதேச சபை, ஆனமடுவ பிரதேச சபை என்பனவற்றிலேயே  முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் வாக்குகள் பெரு எண்ணிக்கையில் உள்ளன. இவ்வாக்குகளை சரியான வகையில்  பயன்படுத்தப்படுவதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக அங்குள்ள வாக்காளர்கள் விழிப்புணர்வூட்ப்பட வேண்டியுள்ளது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் உணர்வுகள் பேரலையாக எழுந்தது உண்மையாகும். அந்த உணர்வுகளின் சூடு ஆரும் முன்னர் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்த உணர்வுகள் நன்கு பிரதிப்பலிக்க வேண்டியுள்ளது. அதற்காக அந்த உணர்வுகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எமக்குள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் நாடாளுமன்றத் தேர்தல் வித்தியாசமானதாகும். தமது தொகுதிக்காக வௌ;வேறு கட்சிகளிலுள்ள உறுப்பினர்கள் களமிறங்கும் தேர்தலாக இது அமைவதால், வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் காட்டிய ஈடுபாட்டை விட பன்மடங்கு ஈடுபாட்டுடன் களமிறங்குவர். எல்லாப் பிரதேசங்களிலும் இத்தேர்தலில் பரபரப்பான சூழல் காணப்படும். இதற்கமைய புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் தனது பணிகளின் முழு வீச்சில் முன்னெடுக்கவுள்ளது.

இத்தேர்தல் தொடர்பில் உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள், சிவில் சமூக கல்வி அமைப்புக்கள், விளையாட்டு இளைஞர் கழகங்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புக்கள் முதலானவர்களிடம் பிரதேச ரீதியான செயற்பாடுகளை முடக்கி விடுவதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

மேலும், இத்தேர்தல் கட்சிகளினதும் அரசியல் பிரமுகர்களினதும் தேர்தலாக இல்லாமல் சிவில் சமூகத்தின் தேர்தலாக பரிணமிக்கச் செய்ய வேண்டியுள்ளது. எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் முடிவை அறிந்து சூழ்நிலைக் கைதிகளாக கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் மாறினார்களோ, அதே போன்றதொரு நிலைக்கு, அரசியல் பிரமுகர்களை உள்ளாக்க வேண்டும். மக்களின் நிலைப்பாட்டின் பின்னால் அவர்கள் இழுத்து வரப்பட வேண்டும்.  

இன்றைய சூழ்நிலையில் மக்கள் சிவில் சமூகத் தலைமைகளின் வழிகாட்டலுக்கு காத்திருக்கின்றனர். அத்துடன், பாதை தெளிவாகத் தெரிவதால் புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் பயணத்தை சௌகரியமாக தொடர்து முன்னெடுத்து செல்கின்றது என தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X