2025 மே 08, வியாழக்கிழமை

புத்தளம் நகர சபையின் உறுப்பினர் முஹுஸி இராஜினாமா

Sudharshini   / 2015 ஜனவரி 17 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹுஸி தனது பதவியை சுய விருப்பத்தின் பேரில் இராஜினாமா செய்துள்ளார்.

புத்தளம் உதவித் தேர்தல்கள் ஆணையாளரிடம் வெள்ளிக்கிழமை (16) தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

தனது இராஜினாமா தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் கடந்த நகர சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலையிலும், என்னை தமது சுயேச்சை அணியின் சார்பில் நியமித்த அல்ஹாஜ் அலி சப்ரி, அவரது சகோதரர் இனாமுல் ஹசன் மற்றும் அவரது நெருங்கிய செயற்பாட்டாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

நான் சேவையிலிருந்த காலப்பகுதியில், எனது சேவைகளை அர்ப்பணிப்புடன் செய்ய முடிந்தது. அதற்காக நகர சபை நிர்வாகத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

நகர சபையின் வரவு செலவுத் திட்டத்துக்கு நானும் எனது சக உறுப்பினருமான வாசல பண்டாரவும் ஆதரவு தெரிவித்தோம்.
மக்களின் நலன்கள், நகரின் அபிவிருத்திப் பணிகள், நகர சபையின் ஊழியர்கள், அதிகாரிகளின் நிர்வாக விடயங்கள் மற்றும் சபையின் இயல்பான செயற்பாடுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டே ஆதரவு வழங்கினோம்.

ஆனால், நாம் பணத்துக்கு சோரம் போனதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும்.

எதிர்காலத்திலும் நான் சமூகப் பணிகளில் ஈடுபடுவேன். எனக்கு இதை விடவும் சிறப்பான வாய்ப்புக்கள் கிடைக்கும் போது, என்னால் மேலும் சிறப்பாக செயற்பட முடியும் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X