2025 மே 08, வியாழக்கிழமை

சடலம் மீட்பு

A.P.Mathan   / 2015 ஜனவரி 19 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி - முக்குத் தொடுவாய்ப் பகுதியிலுள்ள வீதியோரத்தில் மர்மான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் ஒன்றை பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலையில் மீட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு வீதியோரத்தில் மர்மான முறையில் உயிரிழந்து காணப்பட்டார். ஸ்தலத்துக்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதவான் முஹமட் இக்பால், சடலத்தை சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X