2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆரம்ப பிரிவை வேறாக்கும் தீர்மானத்தை எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2015 ஜனவரி 21 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம், சாலியவெவ ஆதர்ஷி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவை வேறாக்கி, ஆரம்ப பிரிவு பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் அனுமதிப்பதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று புதன்கிழமை (21) புத்தளம் வலய கல்விப் பணிமனைக்கு முன்னால் இடம்பெற்றது.


மேற்படி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களும், பெற்றோர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் புத்தளம் வலய கல்விப் பணிமனையை முற்றுகையிட்டிருந்தனர்.


தரம் 01 முதல்; 06 வரையான இந்த ஆரம்ப பாடசாலையை மாற்றுவதன் மூலம் சுமார் 06 கிலோ மீட்டர் பயணித்து தாம் வேறு புதிய பாடசாலைகளுக்கு செல்வதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


விறகு வெட்டுவதன் மூலம் அன்றாட கூலி தொழில் புரியும் நாம் தூரப் பிரதேசங்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து செலவுகளுக்கும் முகங்கொடுக்க நேரிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆரம்ப பாடசாலையை முன்பு இயங்கிய அதே பாடசாலையில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X