2025 ஜூலை 17, வியாழக்கிழமை

35 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Thipaan   / 2015 ஜனவரி 21 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

கற்பிட்டி பிரதேச சபையில் பல வருடங்களாக தற்காலிகமாக கடமைகளில் ஈடுப்பட்டு வந்த 35 ஊழியர்களுக்கு, இன்று புதன்கிழமை(21) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வு நுரைச்சோலையில் தற்காலிகமாக இயங்கி வரும் கற்பிட்டி பிரதேச சபையின் கட்டிடத்தில் நடைபெற்றது.
இந் நியமனத்தின் மூலம் குறித்த ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ்தெரிவித்தார்.

கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X