2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புதையல் தோண்டிய அறுவர் கைது

Thipaan   / 2015 ஜனவரி 24 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொஷான் துஷார

பொலன்னறுவ 28ஆம் மைல்கல் பகுதியில், புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் ஆறுபேரை இன்று சனிக்கிழமை(24) கைதுசெய்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

தனியாருக்கு சொந்தமான இறைச்சி வெட்டும் இடமொன்றில், சட்டவிரோதமாக புதையல் தோண்டியபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அரலகங்வில பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து டிபென்டிர் ரக வாகனமொன்றையும் நீர்க்குழாய், சவள், உப்பு, வாளிகள் மற்றும் நீர் இறைக்கும் பம்பி என்பவற்றையும் மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களை பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X