2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆராச்சிக்கட்டுவ பிரதேசசபை தலைவருக்கு ஆறாம் திகதிவரை விளக்கமறியல்

Thipaan   / 2015 ஜனவரி 24 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் தலைவர் ஜகத் சமந்த பெரேராவை அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மாவட்ட நீதிபதி சிவந்த மஞ்சநாயக்கா, நேற்று வெள்ளிக்கிழமை(23) உத்தரவிட்டுள்ளார்.

மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் வாகனம் உட்பட சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது சட்டத்தரணி ஊடாக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த அவரை, சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான பிரதேச சபைத் தலைவருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த போதும், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் சந்தேக நபர் கடந்த தினங்களில் தலைமறைவாகியிருந்ததாகவும் முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கடந்த 8ஆம் திகதி சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றினுள் நுழைந்து அங்கிருந்த மூவர் மீது தாக்ககுதல் மேற்கொண்டுள்ளதோடு, வாகனம் ஒன்றுக்கும் அங்கிருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவித்ததாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X