2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விபத்தில் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு

Administrator   / 2015 ஜனவரி 27 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்

ஆனமடு தோணிகல எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் கர்ப்பிணித் தாய் ஒருவர், செவ்வாய்க்கிழமை (27) உயிரிழந்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டுக்கச்சி புராணகம பிரதேசத்தைச் சேர்ந்த சத்துரிகா நில்மிணி எனும் 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் பயணித்த முச்சக்கர வண்டி ஓரிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் முச்சக்கர வண்டியில் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த குறித்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டிப்பர் வாகனத்தின் சாரதியான வாரியபொல ரம்பேவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடை நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆனமடு பொலிஸாரால் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X