Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜனவரி 31 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின் புத்தளம் மாவட்ட காரியாலயம் வெள்ளிக்கிழமை(30) மாலை புத்தளம்- மன்னார் வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
புத்தளம் முஹியத்தீன் ஜும்மா பள்ளியின் முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.எம். முசம்மில் இந்த காரியாலயத்தை திறந்து வைத்தார்.
காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதையடுத்து அங்கு விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.
கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினரும் ஆசிரியருமான எம்.எச்.எம். சிபாக் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
புத்தளம் தொகுதி கடந்த 25 வருடங்களாக இழந்து நிற்கும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே இந்த புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் கடந்த இரு வருடங்களாக செயற்பட்டு வருகிறது.
எனவே அதன் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக விட்டுக்கொடுப்போடு அனைவரும் கைகோர்க்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
அங்கு வருகை தந்திருந்த புத்திஜீவிகள், உலமாக்கள் பலரும் தமது ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்தனர்.
வடமேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எச்.எம். நவவி, புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். மு{ஹஸி, புத்தளம் முஹியத்தீன் ஜும்மா பள்ளியின் தலைவர் பீ.எம். ஜனாப், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் நகர சபை உறுப்பினர் எம்.டி.எம்.அமீன் உள்ளிட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின் உறுப்பினர்கள், பொது மக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago