2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மசாஜ் நிலையங்களுக்கு அனுமதியளியேன்: சுசந்த பெரேரா

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வென்னப்புவ பிரதேச சபை அதிகாரப் பிரிவினுள் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல்கள் தவிர, வேறு இடங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது என்று வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேரா தெரிவித்தார்.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சமூக விரோதச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்தீர்மானத்தின் பிரகாரம் இவ்வருடத்திலிருந்து வென்னப்புவ பிரதேச சபை எல்லைக்குள், ஆயுர்வேத மசாஜ் நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது என்பதுடன் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களினுள் மாத்திரம் குறித்த ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் நிலையங்களை நடத்துவதற்குரிய அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X