2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மோசடி வெளிநாட்டு முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ஹலீம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

ஹஜ் மற்றும் உம்ராவுக்குச் செல்பவர்களுக்கு அசௌசரியங்களை ஏற்படுத்தும் மோசடிகளில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு முகவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபாற்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலிருந்து இஸ்லாமிய புனித மார்க்கக் கடமையான ஹஜ் மற்றும் உம்ராவுக்குச் செல்பவர்கள் தங்களுடைய கடமைகளைச் சரிவரச் செய்து விட்டு நாடு திரும்பும் வரை சம்பந்தப்பட்ட முகவர்கள் அவர்களுக்குரிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்து, கடைசி வரைக்கும் பொறுப்புதாரியாக செயற்படுதல் அவசியமாகும்.

வெறுமனே பணம் சம்பாதிப்பதற்காக மோசடிகளில் ஈடுபட்டு வரும் முகவர்களுடைய அனுமதிப் பத்திரங்களை பரிசீலனை செய்து இரத்துச் செய்வதற்கான ஒழுங்கள் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உம்ரா கடமையை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்பட்ட ஆறு பெண்கள் ஜித்தா விமான நிலையத்தில் பொறுப்பேற்க முகவர் நிலைய ஆட்கள் வராமையினால் நிர்க்கதியான நிலைக்கு உட்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் தலதாக அத்துக்கொரலவிடம் கலந்தாலோசித்து இவ்வாறன மோசடிகளில் ஈடுபட்டு வரும் முகவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X