Sudharshini / 2015 பெப்ரவரி 16 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்
கல்பிட்டி, சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்துக்கான நிரந்தரக் கட்டடம் இன்று திங்கட்கிழமை (16) நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் தற்காலிகக் கட்டடங்களிலேயே கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இதனையடுத்தே இங்கு நிரந்தர நீதிமன்றக்கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இவ்விழாவில் முன்னாள் நீதி அமைச்சரும், தற்போதைய நகர அபிவிருத்தி நீர் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மின்சக்தி எரிபொருள் துறை இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, நீதிவான்கள், சட்டத்தரணிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025