2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி மரணம்

Gavitha   / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வென்னப்புவ நைனமடம் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்டு போடப்பட்டிருந்த தேங்காய் மட்டை கிடங்கினுள் மூழ்கி, ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவத்தில் அத்தோட்டத்தில் காவலாளியாகப் பணியாற்றும் குளியாபிட்டி பிரதேசத்தைச் சேந்த ஆர். ஏ. ஹேமபால (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வென்னப்புவ நைனமடம் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான நளின் ஹெட்டியாராச்சி (வயது 52) என்பவரும் அவரது மனைவியான லுணுவில பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியரான புன்னிய குமாரி விஜேசிங்க (வயது 49) ஆகியோருடன் அவர்களது 15 வயது மற்றும் 13 வயதுடைய இரு பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டு, அத்தோட்டத்தில் உள்ள தேங்காய் மட்டை குழியினுள் போடப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் அவர்களது சடலங்கள் கடந்த ஜனவரி 01ஆம் திகதி மீட்கப்பட்டது.

இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான, அத்தோட்டத்தில் காவலாளியாகப் பணியாற்றும் ஒருவரை இரகசிய பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது, அவர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

இதன் பின்னர் குறித்த தோட்டத்துக்கு, கொலை செய்யப்பட்ட உறவினர்களால் இரண்டு காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒருவரே இவ்வாறு குழியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த மட்டைக் கிடங்கில் மீன் பிடிப்பதற்காக வலை போட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, இவர் நீரில் மூழ்கியதாக அவருடன் பணியாற்றிய மற்றைய காவலாளி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X