Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட மடம்பெல்ல, கொடெல்லவத்த பிரதேசத்தில் மண் வெட்டுவதற்கு கப்பம் கொடுக்க மறுத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு இருவரை படுகாயமடையச் செய்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 11 சந்தேக நபர்களையும் நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் பூர்ணிமா பரணகமகே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று செவ்வாய்க்கிழமை (24) உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இத்தாக்குதல் சம்பவம் கடந்த திங்கட்கிழமை (23) மடம்பெல்ல வீதி, ஹல்பேவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மடம்பெல்ல, கொடெல்லவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நிலங்க, கல்யாண் என்ற இரு சகோதரர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை (23) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலங்க என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆறு தையல் போடப்பட்டுள்ளதுடன் இடது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது சகோதரரது இடது கை கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.
செங்கல் தயாரிப்புக்காக மண் வெட்டும் தொழில் செய்து வந்த இவர்களிடம் கப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, கடந்த திங்கட்கிழமை மீண்டும் மண் வெட்டிக் கொண்டிருந்த போது 30 பேர் கொண்ட குழு, வாள் மற்றும் பொல்லுகளால் தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தொடர்ந்தும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
48 minute ago
2 hours ago