2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாழ்வாதார உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்


திவிநெகும அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப்பொருட்களை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வியாழக்கிழமை (26) மாலை புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிராமத்துக்கு 3 இலட்சம் எனும் 'வாழ்வின் எழுச்சி' அபிவிருத்தி திட்டத்தின் வாழ்வாதார உதவிகளே பயனாளிகளுக்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.


முன்பள்ளி ஆசிரியைகள், விதவைகள், குறைந்த வருமானம் பெறுபவர்கள், சாதாரண வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமூர்த்தி உதவி பெறுபவர்களுக்கு தண்ணீர் தாங்கிகள், தையல் இயந்திரங்கள், கேஸ் சிலிண்டர்கள், அடுப்புகள் மற்றும் கால்நடைகள்  என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.


புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மின்சக்தி, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, புத்தளம் நகரசபை உறுப்பினர் வாசல பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X