Gavitha / 2015 மார்ச் 02 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு கதிரானை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் முதியான்சலாகே ஹெரந்த தயசான் ஜயரத்ன (26 வயது) என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே சம்பவ இடத்தில் பலியானவராவார்.
இவர் பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய உப பொலிஸ் பரிசோதகர் மதுசான் டயஸ் (23 வயது) படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டு விட்டு குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பொலிஸ் நிலையம் நோக்கி சென்றுள்ளனர். இதன் போது, நீர்கொழும்பு கதிரானை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் வைத்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன், பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளது.
எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ரணித்த லக்சான் என்பவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் பயணித்த மற்றைய நபர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025