2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகளை பாவித்த 24 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2015 மார்ச் 03 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தடைசெய்யப்பட்டுள்ள சுருக்குவலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 மீனவர்கள்  கல்பிட்டி வடக்குப் பகுதியில் சிலாவத்துறை கடல் எல்லையில் நேற்று திங்கட்கிழமை கல்பிட்டி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள்  தெரிவித்தனர்.   

இந்த மீனவர்களிடமிருந்து இரண்டு சுருக்குவலைகள் மற்றும்  ஐந்து படகுககள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

கைப்பற்றப்பட்ட சுருக்குவலைகள் மற்றும் படகுகளுடன் இந்த மீனவர்கள்,  புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X