2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மீனவரை காணவில்லை

Kogilavani   / 2015 மார்ச் 09 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில்   இடம்பெற்றுள்ளது.

சிலாபம் காக்கப்பள்ளி பண்டாரவத்தை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த பியுமால் சிரான் பெர்னாண்டோ (வயது 43) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

தனது நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற இவர் மீன்பிடித்துகொண்டிருந்த போது கடலலையில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரை மீட்கும் பணியில் சிலாபம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X