Princiya Dixci / 2015 மார்ச் 11 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்
கல்பிட்டி நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தாயொருவரும் அவரது 04 வயது மகனும் உயிரிழந்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்பிட்டியைச் சேர்ந்த நசீமா (வயது 21) முஹம்மது பர்ஹான் (வயது 04) ஆகிய இருவருமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியொன்றும் சிறிய ரக லொறியொன்றும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லாந்தழுவை பிரதேசத்திலுள்ள தமது உறவினர்களின் வீட்டுக்கு நேற்றுப் பகல் சென்று இரவு முச்சக்கரவண்டியில் திரும்புகையிலேயே தாயும் மகனும் இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் படுகாயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் இன்று புதன்கிழமை (11) உயிரிழந்தார்.
விபத்துடன் தொடர்புடைய சிறிய ரக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025