2025 மே 08, வியாழக்கிழமை

பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல்: மூவர் கைது

Kogilavani   / 2015 மார்ச் 12 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி காயமேற்படுத்தியதாகக் கூறப்படும் நபரையும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் மேலும் இருவரையும் சாலியவௌ பொலிஸார் புதன்கிழமை(11) இரவு கைதுசெய்துள்ளனர்.

சாலியவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபெம்ம பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட கோடா அடங்கிய நான்கு பெரல்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புடைய நபரை கைதுசெய்ய முயன்றபோது இருசாரரக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜன்டை தாக்கி காயமேற்படுத்திய சந்தேக நபர், முதலில் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு அதனைத் தொடர்ந்து அவரின் இரு மகன்களையும் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்துக்காக கைதுசெய்துள்ளனர்.

கைதானவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X