Suganthini Ratnam / 2015 மார்ச் 12 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி மகாவலி கங்கைக்கு அருகில் உள்ள முருகன் ஆலயத்தின் சுற்றாடலை மகாவலி கங்கையின் மண் அரிப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலன்னறுவை மாவட்ட அரசாங்க அதிபர் பணித்துள்ளதாக ஆலய யாத்திரை மடத்தின் நம்பிக்கை சபைப் பொறுப்பாளரும் பொருளாளரும் ஸ்ரீரமண மகரிஷி அறப்பணி மன்ற இலங்கை கிளைத் தலைவருமான எம்.செல்லத்துரை தெரிவித்தார்.
மேற்படி ஆலயத்தின் சுற்றாடல் வருடாவருடம் மகாவலி கங்கையின் வெள்ளப்பெருக்கு காலங்களில் மண்ணரிப்புக் உட்படுவதால், ஆலயம் சேதமடைகிறது. இது விடயமாக நேற்று புதன்கிழமை பொலன்னறுவை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து எடுத்துக்கூறியபோது, ஆலய சுற்றாடலை மண்ணரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகாவலி அதிகாரசபையின் வெலிக்கந்தைக்கு பொறுப்பான வதிவிட முகாமையாளருக்கு அரசாங்க அதிபர் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆலயத்துக்கு செல்லும் கிறவல் பாதையும் புதிதாக செப்பனிடப்படவுள்ளது. அதற்கான பணிப்புரையையும் அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்.
கடந்த முப்பது வருட போருக்கு பின்னர் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து இந்த கோவிலில்; இன ஐக்கியப் பொங்கல் பெருவிழாவை வருடாவருடம் நடத்தி வருவதாகவும் எதிர்காலத்தில் திம்புலாகல பிரதேசத்தில் வாழும் தமிழ், சிங்கள மக்களின் இன ஐக்கியத்துக்கு ஊடாக சமய நல்லிணக்கத்தையும் சமூக சகவாழ்வையும் வளர்க்க விருப்பதாகவும் திம்புலாகலை பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு அதிகாரி எல்.ஏ.வி.எல்.அனுஷா தெரிவித்தார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025