2025 மே 09, வெள்ளிக்கிழமை

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரது மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Sudharshini   / 2015 மார்ச் 28 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

நாத்தாண்டி பிரதேசத்தில் வசிக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை, இனத்தெரியாத நபர் ஒருவரால் இன்று (28) அதிகாலை தீவைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதென மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.  

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருடைய மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த காலங்களில் தீர்க்கப்படாதிருந்த பல குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, உரியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பங்களிப்புச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் அவரை எச்சரிக்கும் நோக்கில்  மோட்டார் சைக்கிளுக்குத் தீவைக்கப்பட்டிருக்கலாம்  என நம்பப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மாராவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X