Thipaan / 2015 மார்ச் 31 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். எஸ். முஸப்பிர்
சட்ட விரோத வலைகளை பயன்படுத்தியமை மற்றும் கடல் எல்லையை தாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் ஐந்து மீனவர்களை செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் மாவட்டத்தின் முந்தல்- முக்குத்தொடுவாய் கடல் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (30) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள், எல்லைதாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது முக்குத் தொடுவாய் பகுதி மீனவர்கள் இவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களினால் பயன்படுத்தப்பட்ட இரண்டு இயந்தரப் படகுகள் இரண்டு எஞ்சின்கள், 23 ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட ஒரு தொகை வகைகளையும் மட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த முந்தல் பொலிஸார், விசாரணையின் பின்னர் அவர்களை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago