Gavitha / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக பதில் உப அஞ்சல் அதிபர்களாக கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதம் வழங்கும் வைபவம் திங்கட்கிழமை (20) நடைபெறவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், தபால் மா அதிபர் டீ.எல்.ஆர். அபயரத்ன தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எ.எச்.எம். அப்துல் ஹலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிரந்தர நியமன கடிதங்களை வழங்கவுள்ளார்.
நாடளாவிய ரீதியில் பல வருடங்களாக பதில் உப அஞ்சல் அதிபர்களாக கடமையாற்றிய 646 பேர் நிரந்தர உப அஞ்சல் அதிபர்களாக நியமனம் பெறவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் 10 பேர், அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் 11 பேர், மட்டக்களப்பு பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் 11 பேர், திருகோணமலை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் 08 பேருமாக 40 பேர், நிரந்தர உப அஞ்சல் அதிபர்களாக நியமனம் பெறவுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago