Princiya Dixci / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம், பாலாவி குவைத் கிராம வீடொன்றிலிருந்து வயோதிபர், சனிக்கிழமை (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பாலாவி, குவைத் கிராமத்தில் வசித்து வந்த முஹம்மது காசிம் அனிபா (வயது 66) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசிப்பவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்தே புத்தளம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த இவர் நுளம்பு வலைக்குள் கட்டிலில் தூங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம் தள வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஸாம் முன்னிலையில் மரண விசாரணைகள் இடம்பெற்றன.
மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக அவயவங்கள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago