Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து அனுராதபுரத்துக்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் பொருட்டு புத்தளம் சிறுகடல் வாவியின் நடுவே அதி மின்வலு கொண்ட மின் கம்பங்களை நாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான சுற்று வட்டத்தில் திங்கட்கிழமை (20) புத்தளம் மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம் வளர்பிறை மீனவர் சங்கம், அம்பர் மீனவர் சங்கம் மற்றும் புத்தளம் மக்கள் குரல் அமைப்பு என்பன இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
'கடந்த ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தை நிறுத்தக்கோரி நாம் பல்வேறு போராட்டங்களை நடாத்தியுள்ளோம். எனினும் மைத்திரியின் நல்லாட்சியில் இத்திட்டம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனக்கோரியும் நாம் முன்வைத்துள்ள ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்' என்ற நோக்கிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago