2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

கடுமையான் குளம் வீதி புனரமைப்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட புத்தளம் கடுமையான் குளம் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவடையும் நிலையில் காணப்படுகிறது.

குன்றும் குழியுமாக காணப்பட்ட இப்பாதையை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள், புத்தளம் நகர முதல்வரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான  கே.ஏ.பாயிசிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் புனரமைப்பு பணிகள் உடனடியாக ஆரம்பிக்கபட்டன.

புத்தளம் நகரில் பின்தங்கிய நிலையில் காணப்படும் பாதைகளை காபட் பாதைகளாக புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இப்பாதையும் ஏற்கெனவே உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .