2025 மே 07, புதன்கிழமை

புத்தளம் உப புகையிரத நிலைய பொறுப்பதிகாரி கைது

Princiya Dixci   / 2015 ஜூலை 22 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

திருட்டு சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் புத்தளம், மங்கள எளிய உப புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி, நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத நிலையத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றின் வானொலி திருடப்பட்டமை தொடர்பில் முந்தல் பொலிஸாருக்கு முச்சக்கரவண்டியின் சாரதியினால் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை நடத்திய முந்தல் பொலிஸார், அருகிலிருந்த உப புகையிரத நிலையத்தினுள் சென்று பரிசோதித்த போது அங்கு திருடப்பட்டதாகக் கூறப்பட்ட வானொலி கிடைக்கப்பெற்றதாகவும் அதனையடுத்து சந்தேகத்தில் அங்கு கடமையாற்றிய உப புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரியான 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X