2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு; இருவர் காயம்

Princiya Dixci   / 2015 ஜூலை 23 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் 12ஆவது மைல் கல்லில் இன்று வியாழக்கிழமை (23) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கருவெலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர். 

சசிக்குமார் என்ற 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

முல்லைத்தீவிலிருந்து உடுப்பிட்டிய நோக்கி, கருவாடு மற்றும் நெத்தலி ஏற்றிக்கொண்டு சென்ற கெப் ரக வாகனம் குடைசாந்து சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற லொறியின் மீது மோதியமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கருவெலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது, கெப் ரக வாகனத்தில் பயணம் செய்த இளைஞர் காயங்களுக்கு உள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் கெப் ரக வாகன சாரதியின் தூக்கம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கருவெலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் காயமடைந்த இருவர் புத்தளம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கருவெலகஸ்வௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X