Princiya Dixci / 2015 ஜூலை 24 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.ஹிஜாஸ்
புத்தளம், நீர்கொழும்பு பிரதேசங்களில் ஹெரோயின் விற்பனையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை நேற்று வியாழக்கிழமை (23) கைது செய்துள்ளதுடன் 12 கிராம் ஹெரோய்னும் மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டவரிடமிருந்து 12 கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் புத்தளம் மதுரங்குளியில் 10 கிராம் ஹெரோய்னுடன் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினையடுத்தே இந்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக முந்தல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .